உங்களுடைய கனவில் தங்கம் அல்லது வெள்ளி நகைகள் கிடைத்தால் என்ன பலன் தெரியுமா? இது தெரிந்தால் அவ்வளவுதானா என்று தோன்றிவிடும்

தங்கம் அல்லது வெள்ளி நகைகள் விற்கும் விலைக்கு அதை வாங்குவது என்பதே நமக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவற்றை எல்லாம் கனவில் கண்டால் என்ன பலன்? என்று யோசித்து பார்ப்பதற்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஒருவருடைய கனவில் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது போலவோ அல்லது கீழே இருந்து கிடைப்பது போல் வந்தால் என்ன பலன்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கனவு என்பதை ஒரு விசித்திரமான விஷயம் தான். நம் ஆழ் மனதில் தேங்கியுள்ள சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நம் கனவில் வந்து செல்வது உண்மை தான். எழுந்த பின் அந்தக் கனவு ஞாபகத்தில் இருந்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் நான் நினைக்கவே இல்லை, ஆனால் நம் கனவில் எப்படி வருகிறது? என்று குழம்பித் தான் போவோம். ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய ஆழ்மனது சில விஷயங்களை கவனித்து கொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் சில உங்கள் பார்வையை தாண்டி மூளைக்குள் சென்று இருப்பது போல, உங்களை அறியாமலேயே உங்கள் கண்களுக்கு தெரியாத சில விஷயங்களைக் கூட மூளை பதிவேற்றி கொள்ளும். அது ஆழ்மனதில் சென்று பதிந்து கொள்ளும். அதைப் பற்றி எல்லாம் நாம் நினைக்கா விட்டாலும் கூட, ஒரு நாள் நமக்கு அது கனவாக வந்து செல்லும். நீங்கள் அந்த விஷயத்தை பார்த்து ஒரு வாரம் கழித்து அல்லது ஒரு நாள் கழித்து கூட உங்களுக்கு இப்படி கனவாக தோன்றலாம்.

ஒரு சில விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது இது உண்மை என்பது உங்களுக்கே தெரிய வரும். அந்த வகையில் தான் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை ஆழ் மனதில் கிடைப்பது போல எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, அது தங்கம், வெள்ளி, பணம், நகைகள் என்று ஏதாவது ஒன்று கிடைப்பது போல கனவில் தோன்றுவது இயல்பான ஒரு விஷயம் தான். தங்கம், வெள்ளி போன்ற நகைகள் கிடைக்கும் பொழுது நம்மிடம் நகை அதிகம் சேருமா? என்று கேட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சட்டென மறுத்து விடவும் முடியாது என்கிறது ஜோதிடம். தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் நவகிரகங்கள் அடங்கியிருக்கும் ஒரு உலோகங்களாக இருக்கின்றன. தங்கம் மகாலட்சுமியையும், குபேரனையும் குறிக்கிறது. வெள்ளி சுக்கிர பகவானை குறிக்கிறது. எனவே இவைகள் எல்லாம் கனவில் கிடைப்பது போல தோன்றும் பொழுது கிரக மாற்றங்கள் காரணமாக உங்களுடைய வாழ்வியலும் மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது. திடீரென இது போன்ற தங்கம் வெள்ளி கிடைப்பது கனவாக தோன்றினால் மகா லக்ஷ்மியையும், சுக்கிர பகவானையும் வழிபடுவது உத்தமம்.

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டில் உங்களிடம் இருக்கும் தங்க நகைகளை மஞ்சள் கலந்த நீரில் வைத்து அதற்கு தூப, தீப ஆராதனை காண்பியுங்கள். அதே போல வெள்ளி நகைகள் அல்லது வெள்ளி பொருட்கள் கிடைத்தால் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வெள்ளி நகைகள் அணிவித்து வழிபாடு செய்யுங்கள். இப்படி செய்ய உங்களிடம் திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.