வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குச் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு கோவிட் தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருடன் தொடர்பைப் பேணிய இ.போ.ச ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பயணத்தடையின் பின்னர் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாணத்தில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சாரதி நடத்துநர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.