இலங்கையில் அடுத்த வாரம் முதல் பாணின் விலை அதிகரிப்பு

அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, பாண் தவிர ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை  5  முதல்  10 ரூபா  வரை அதிகரிக்க வேண்டியிருந்தது என அவர் மேலும் கூறினார்.

செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.