இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி 12 கர்ப்பிணிகள் மரணம்

கோவிட்19 நோய்த் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 12 கர்ப்பிணி பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாட்டில் 12 கர்ப்பிணிகள் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் இது ஆபத்தான ஓர் நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் இருநூறு பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் கோவிட் தடுப்பூசியை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.