நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும்

இந்த உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்தால் தான் அந்த பிறப்பு முழுமையடைகிறது. ஆயுள், ஆரோக்கியம் இரண்டையுமே தரக் கூடியவர் சிவபெருமான் ஆவார். இந்த இரண்டும் நம் வாழ்க்கையில் இருக்கும் பொழுது தான் நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும். இத்தகைய வரங்களை பெற்று நல்வாழ்வு பெறவும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் தான் இது! அது என்ன மந்திரம்? எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

மந்திரம்:

நமஸ்தே அஸ்து பகவன்!

விச்வேஸ்வராய மஹாதேவாய!

த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய!

த்ரிகாக்னி காலாய!!

காலாக்னி ருத்ராய நீலகண்டாய!

ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய!

ஸதாசிவாய ஸ்ரீமன்!

மஹாதேவாய நம!!

நம்மிடம் என்ன தான் வசதி, வாய்ப்புகள், அதிகாரம், புகழ், அழகு என்று இருந்தாலும் ஆயுளும், ஆரோக்கியமும் இல்லை என்றால் அதனை அனுபவிக்க முடியாமலேயே போய்விடும். தான் என்ற அகம்பாவம் கொண்டிருந்தால் அந்த அகம்பாவத்தை அடக்கியாள இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் அவனுக்கு குறையை வைத்து விடுவான். மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மிகப் பெரிய நோய்களும் வருவதற்கு இதுவே காரணமாகிறது.

எவ்வளவு பெயரும், புகழும், அந்தஸ்தும் நம்மிடம் திடீரென வந்தாலும், வந்து கொண்டிருந்தாலும் எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்து இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டும். அப்படி செய்யாமல் நான் தான் அனைத்தும்! என்னால் தான் அனைத்தும் நடந்தன! என்கிற ஆணவமும், அகங்காரமும் கொண்டிருந்தால் அவர்களிடம் இருக்கும் ஆயுளை இறைவன் குறைத்து விடுவாராம். தன்னடக்கமும், பணிவும் கொண்ட ஒரு நபருக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் எப்பொழுதும் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் நான் பணக்காரன்! என்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்று திமிர் பிடித்து அலைந்தால் அந்த திமிரை அடக்கி ஆள ஆரோக்கியத்தை அபகரித்து விடுகிறார். பணம் மட்டுமல்ல! அழகிலும் சிறந்தவர்கள் பல நேரங்களில் அடக்கமாக இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் தான், தான் பேரழகு என்று செருக்கு கொண்டு அலைவார்கள். இப்படி அழகு என்கிற செருக்கு கொண்டவர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் குறையும்.

நம்மிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல! நம்மிடம் இறைவன் அருள் இருக்கிறதா? இல்லையா? என்பது தான் மிகவும் முக்கியம். இறைவன் அருள் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எவ்வித குறையும் இருக்காது. எந்த ஒரு ஆரோக்கிய ரீதியான பிரச்சனை நமக்கு வந்தாலும் உடனே நீங்கிவிடும். நிறைய நாட்களுக்கு இருந்து கொண்டு தொந்தரவு செய்யாது. எவ்வளவு கண்டங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்பது போல அதிலிருந்து சுலபமாக வெளியில் வந்து விடுவார்கள். நமக்கு ஆரோக்கியம் குன்றி இருக்கும் பொழுதும், விபத்துகள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்காகவும் மானசீகமாக 108 முறை மேல்கண்ட இந்த மந்திரத்தை உச்சரித்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.