இலங்கையில் கற்றல் நடவடிக்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக மாணவர்களுக்கு வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுனாமி கடல்பேரலை மற்றும் தற்போதைய கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் இந்த தொலைகாட்சி அலைவரிசை ஊடான மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாடசாலைகளைப் போன்று காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.