கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

இலங்கையில் வெப்பநிலை சுட்டியில் தீவிரமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்படி 32 செல்சியஸ் பாகை முதல் 41 செல்சியஸ் பாகை அளவான சுட்டெண் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.கிழக்கு மாகாணம், வடமேல், வடமத்திய, மேல் மற்றும் தென் மாகாணத்தின் சில இடங்கள், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த வெப்ப அதிகரிப்பு சுட்டெண் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று பகல் ஆரம்பித்த இந்த வெப்பநிலை இன்று வரை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்., தொடர்ந்தும் வெப்பநிலையில் பணியாற்றுபவர்களுக்கு வெப்ப அழுத்தம் உட்பட்ட தாக்கங்கள் ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.