வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பப்பாளிப் பழங்கள்

பப்பாளிப் பழங்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் மாத்திரம் 796,249 மில்லியன் ரூபா செலவு செய்து இவ்வாறு பப்பாளிப் பழங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி புத்திக பத்திரண கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.