ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் இள வயதில் சாதித்த பெண் !

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் 16 வயது மாணவி ஒருவர் பட்டம் பெறவுள்ளார்.

விவியன் ஷி என்ற இந்த மாணவி, கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகின்ற மிக இளவயதுப் பட்டதாரியாவார்.

மேலும் இரண்டாம் நிலை பாடசாலைக்குள் நுழைவதற்கு முன்னதாக, பல தரங்களை தவிர்த்து, ஒரே கோடையில் இவர் 10ஆம் தரத்தை பூர்த்தி செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.