சீனி இறக்குமதியை இடை நிறுத்த அரசாங்கம் முடிவு !அதிகரிக்கும் சீனி விலை

சீனி மீதான இறக்குமதி வரி ஏதேனும் அதிகரித்தால் ஆறு மாதங்களுக்கும் மேலாக சீனி வைத்திருக்கும் இறக்குமதியாளர்களால் அதிக லாபம் ஈட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், சீனி இறக்குமதியை இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிறு ஏற்றுமதி பயிர் ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.


சீனி இறக்குமதி செய்வதற்கான செலவு கிலோ ஒன்றுக்கு ரூபா 96.20 ஆக உள்ளது. இந்தநிலையில் இறக்குமதி வரியை ரூ 50.00ஆல் உயர்த்தினால் சீனியின் விலை கிலோ ரூபா 150.00 வரை உயரும். இந்த சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில் இறக்குமதியாளர்கள் விலை உயர்வைப் பயன்படுத்தி, பழைய கையிருப்புகளை புதிய விலைக்கு சந்தைப்படுத்துவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சிவப்பு சீனியின் கையிருப்புகளை சதோச மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ .117 க்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.