திருகோணமலை தம்பலகாமத்தில் 19 பேருக்கு கோவிட் தொற்று

திருகோணமலை-தம்பலகாமத்தில் 19 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கோவிட் பற்றிய விபரங்களை இன்று (28) திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்ட போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 56 கோவிட்-19 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ள நிலையில் 32 ஆண்களும், 24 பெண்களும் அடங்குவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மாவட்டத்தில் 4424 பேர் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28ம் திகதி வரை 134 பேர் மரணித்துள்ளதாகவும் 95 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.