எச்சில் மூலம் பரவும் டெல்டா வைரஸ் – விசேட வைத்தியர் எச்சரிக்கை

நாடொன்றில் கோவிட் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்தால், அதில் கட்டாயம் புதிய மாறுபாடு ஏற்படும் என வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் டெல்டா மாறுபாடு வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மிகவும் வேகமாக பரவுவதுடன், முதலாம் இரண்டாம் அலைகளை போன்று புதிய அலையாக பரவுவதனை காண முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த டெல்டா மாறுபாடு கடுமையான நோய் தொற்றினை ஏற்படுத்தும் என இதுவரையில் உறுதியாகியுள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார்.

எந்த வகையான வைரஸ் பரவினாலும் அவை எச்சில் துளிகளின் ஊடாக மாத்திரமே பரவுவதாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பன்றி மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.