சண்டை, சச்சரவு நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருக வாரம் ஒருமுறை இதை செய்யுங்கள்

இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.


என்னதான் சம்பாதித்தாலும் சில வீடுகளில் தொடர்ந்து உடல்நலக் குறைபாடு, கணவன் மனைவிக்குள் எப்போதும் கருத்து வேறுபாடுகள் , சண்டை , சச்சரவுகள் நீடித்துக்கொண்டே இருக்கும். அப்படி இருந்தால் இதனை ஒரு எளிய பரிகாரம் மூலம் சரி செய்து விட முடியும். இதனை நம்பிக்கையுடன் செய்து வர சிறப்பான பலன்களை பெறலாம். வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் பொழுது சிறிதளவு வெண்கடுகை கையில் எடுத்து வீட்டின் அனைத்து மூலைகளிலும், திசைகளிலும் தூவி விடலாம்.

24 மணி நேரம் கழிந்ததும் வீட்டை சுத்தமாக பெருக்கி ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இதனைச் செய்வதால் வீட்டில் அமைதி நிலவுவதை அனுபவத்தில் உணரலாம். இதே போல் வாரம் 1 அல்லது 2 முறைகள் , விசேஷ தினங்கள் சாம்பிராணி புகை போடலாம். அதிலும் வெண்கடுகு தூபம் போடலாம். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு, சாம்பிராணி, குங்குலியம், ஏலக்காய் சேர்த்து தூபம் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று தெய்வீக மணம் கமழுவதை உணர முடியும்.

இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள் .அதே போல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தாலும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம்.