நாட்டு மக்களுக்கு ஆறுதலான செய்தி…கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் பதிவில் வீழ்ச்சி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 184 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளூரில் பரவாமல் இருக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.எனினும், ஏற்கனவே இலங்கைக்கு வந்திருந்த சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்தார்.இந்நிலையில், மார்ச் 11ம் திகதி கொரோனா தொற்றினால், இலங்கையில் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார்.அன்று முதல் இன்று வரை கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்துள்ளது.இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நூறு நபர்கள் 14 நாட்களில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 100 முதல் 200 வரையான நபர்கள் 18 நாட்களில் அடையாளம் காணப்பட்டனர்.200 முதல் 300 வரையான நபர்கள் ஒன்பது நாட்களில் அடையாளம் காணப்பட்டனர். எனினும், 300 முதல் 400 வரையான நபர்கள் மிகவும் குறுகிய காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டனர்.இவர்கள் நான்கு நாட்களில் அடையாளம் காணப்பட்ட நிலையில், 400 முதல் 600 வரையிலானவர்கள் வெறும் நான்கு நாட்களில் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையிலேயே, கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 600 முதல் 700 வரையான நபர்கள் ஐந்து நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.