வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலத்தின் முதல்வர் சுகவீனத்தால் மரணம்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலத்தின் முதல்வர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை சுகவீனம் காரணமாக இன்று (28) மரணமடைந்தார்.

கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்திருந்த அவர் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்தார். ஆயினும் இன்று காலை தனது 61 வது வயதில் மரணமடைந்தார்.

தேசிய பாடசாலையான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை அவர் முதல்வராக கடமையாற்றியிருந்தார்.

மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை பாடசாலையின் முதல்வராக அவர் செயற்பட்டிருந்தார்.

மன்னார் மாவட்டம் நானாட்டானை பிறப்பிடமாக கொண்ட அவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சியில்  அதிக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.