எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய 1 படம் தினமும் இந்த தெய்வத்திற்கு இப்படி பூஜை செய்து வந்தாலே போதும் வெற்றி உங்களை தேடி வரும்

வாழ்க்கையில் நாம் எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் அதில் வெற்றி அடைய வேண்டும். அதாவது சர்வ ஆகர்ஷணம் பெற நம்முடைய வீட்டில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சர்வம், என்பது எல்லாவற்றையும் என்பதை குறிக்கின்றது. ஆகர்ஷணம், என்பது எல்லா நன்மைகளும் நம் வசமாகி எல்லா வகையான முயற்சிகளிலும் வெற்றியை பெறுவது. இல்லற வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமா, குழந்தை பாக்கியம் வேண்டுமா, எல்லா தெய்வங்களின் ஆசீர்வாதமும் அருளாசியும் கிடைத்து நம்முடைய வாழ்வில் சுபிட்சம் அடைய வேண்டுமா நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க வேண்டுமா, நோய் நொடிகள் தான் தீர வேண்டுமா, என்ன நன்மை வேண்டும் உங்களுக்கு, இந்த காமாட்சி அம்மனின் திருவுருவ படத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து இப்படி பூஜை செய்யுங்கள் போதும்.

எல்லார் வீட்டு பூஜை அறையிலும் எப்படி அவரவர் வீட்டு குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருக்கின்றதோ, அதே போல் இந்த காமாட்சி அம்மனின் திருவுருவமும் கட்டாயம் இருக்க வேண்டும். காமாட்சி அம்மனின் திருவுருவ படத்தை பூஜை அறையில் மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று, தீபம் ஏற்றி விட வேண்டும். பூஜை செய்யும் போது காமாட்சி அம்மனிடம் மனமுருகி வரங்களை கேட்க வேண்டும்.

உங்களுடைய மனதில் எதை நினைத்துக் கொண்டு இந்த காமாட்சி அம்மன் வழிபாட்டை செய்கிறீர்களோ, அது அப்படியே நடக்க வேண்டும் என்ற ஆசீர்வாதத்தை உடனடியாக கொடுக்கக் கூடிய சக்தி இந்த காமாட்சி அம்மனுக்கு உண்டு. காமாட்சி அம்மனுக்கு தினம்தோறும் குங்கும அர்ச்சனை செய்து வர வேண்டும். 108 முறை ‘ஓம் காமாட்சி அம்மனே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்து, கரும்பை நிவேதனமாக வைத்து உங்களுடைய வேண்டுதலை வைத்து பாருங்கள். பிறகு நடக்கும் அதிசயத்தை.

பெரும்பாலும் எல்லா சமயங்களிலும் கருப்பு நிறத்தில் இருக்கும் கருப்பு கிடைக்காது. வெள்ளை நிற கரும்பு கிடைத்தாலும் கூட அதிலிருந்து ஒரு சிறிய துண்டு கரும்பை காமாட்சி அம்மனுக்கு நிவேதனமாக வைக்கலாம். தொடர்ந்து 48 நாட்கள், குங்கும அர்ச்சனை யோடு, கரும்பை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்தால், நீங்கள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேற தொடங்கும். அதன் பிறகு உங்களால் காமாட்சி அம்மனின் வழிபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மன உறுதியும் நம்பிக்கையும் பக்தியும் அம்மனின் மீது வந்து விடும். உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கும். இறைவனுக்கு பிரசாதமாக வைத்த இந்த கரும்பை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம் தவறொன்றும் கிடையாது. வேண்டிய வரங்களை உடனடியாக பெறுவதற்கு காமாட்சியம்மன் ஆசிர்வாதம் கிடைத்தாலே போதும் காமாட்சி அம்மன் வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும் என்பது மகா பெரியவரின் கூற்றும் கூட.

உங்களுடைய வீட்டில் காமாட்சி அம்மனின் திருவுருவ படம் இருந்தால், கஷ்டங்கள் கரைந்து போக வேண்டும், எண்ணிய காரியம் எண்ணியபடியே நிறைவேற வேண்டும், என்று நினைத்தால் தாமதம் செய்யாமல், இந்த பூஜையை நாளையில் இருந்தே தொடங்கலாம். நம்பி காமாட்சி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு என்றுமே ஏமாற்றம் கிடைத்ததில்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.