முல்லைத்தீவு – கள்ளப்பாட்டு பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்! ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு – கள்ளப்பாட்டு பகுதியில் இன்றிரவு வீடொன்றிற்குள் புகுந்த கும்பலொன்று வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வீட்டில் இருந்தவர்களில் ஒருவர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு-கள்ளப்பாட்டு பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுநந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி தீ வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வாகனம் ஒன்று முற்றாக தீயில் எரிந்துள்ளதுடன், மேலும் ஒரு வாகனம் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.