நாட்டு மக்களுக்கு மகிழ்சியான செய்தி… நாளை முதல் ஐயாயிரம் ரூபா..!!

தற்போதைய நிலைமை காரணமாக ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை நாளை முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் இதன்படி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. அதேபோல் முதியவர்களுக்கான கொடுப்பனவு, ஓய்வூதியம் என்பவற்றையும் வெசாக் தினத்திற்கு முன்னர் வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை பணித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பலரும் வருமானம் இன்றி அவதிப்பட்டுவந்ததையடுத்து இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.