விமானத்திலிருந்து குதித்த நபர்: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

அமெரிக்காவில் விமானத்தில் ஒரு நபர் விமானியின் அறைக்கு செல்ல முயற்சித்ததோடு விமானத்திலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க விமானத்தில் பயணிகள் விதிகளை மீறி செயல்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்திருந்துள்ளார்கள்.
அதன்பின்பு ஓடு பாதைக்கு விமானம் நகரத் தொடங்கியது. அப்போது திடீரென்று ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்து விமானியின் அறைக்கு செல்ல முயற்சித்துள்ளார்.

அதன்பின்பு விமானத்தின் அவசர கதவைத் திறந்து விமானம் நகர்ந்து கொண்டிருக்கையில் குதித்து விட்டார். இதில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பயணியை பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.