கோவிட் மூன்றாம் அலை! இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் மாத்திரம் 150,000 க்கும் அதிகமானோர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மூன்றாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152, 408 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்றாவது அலைகளின் போது வைரஸுடன் தொடர்புடைய இறப்புகளின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2,296 ஆக உயர்ந்துள்ளது.

2021, ஏப்ரல் மாதத்தில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலை ஆரம்பமானது.

குறிப்பாக 2021, ஏப்ரல் 15 முதல், இலங்கை கோவிட் தொற்றுக்களில் அதிக எண்ணிக்கையானோர் பதிவாகினர்.