இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் 100 கர்ப்பிணி தாய்மார்கள்

கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளான சுமார் 100 கர்ப்பிணி தாய்மாரும், 50 பாலூட்டும் தாய்மாரும் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

11 தாய்மார் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கர்ப்பிணி தாய்மார் அல்லது பாலூட்டும் தாய்மாருக்கு ஒரு நாள் காய்ச்சல் இருந்தாலும் அவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதனால் கர்ப்பிணி தாய்மார்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முறையான சுகாதார நடைமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றிக் கொள்வது அவசியமானதாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.