கடன் தீர்க்கும் கல்லுப்பு! லட்ச லட்சமாய் கடன் இருந்தாலும் விரைவாக அடைய வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்யுங்க!

ஒரு சில விஷயங்களை வெள்ளிக்கிழமையில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும். உதாரணத்திற்கு உப்பு, சர்க்கரை போன்றவற்றை தானம் கொடுப்பது, பால், தயிர் போன்றவற்றை கடன் கொடுப்பது என்பதெல்லாம் வெள்ளிக்கிழமையில் செய்யவே கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் உப்பை வைத்து இதை செய்தால் லட்சம் லட்சமாய் கடன்கள் இருந்தாலும் விரைவாக அடைந்து விடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை அனைவரும் செய்யலாம். எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்!!

வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே நொந்து போனவர்கள் ஏராளம். அதைப் பல இடங்களில் நம் கண் முன்னே நாம் பார்த்தும் வேறு வழி இல்லாமல் கடனை வாங்கி விடுகிறோம் ஆனால் வாங்கிய கடனுக்கு கடைசி வரை அசலை அடக்க முடியாமல் நம் உழைப்பை மொத்தமும் வீணாக்கி கொண்டிருப்போம். சுய ஜாதகத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் அதில் இருந்து விமோசனம் பெற இந்த எளிய பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்து வரலாம். இப்படி தொடர்ந்து செய்து வர உங்களுக்கே நல்ல மாற்றங்களை உணர முடியும்.

பொதுவாக கல் உப்பை மகாலட்சுமியின் அம்சமாக குறிப்பிடப்படுகிறது. உப்பை கடனாக கொடுக்கும் பொழுது கைகளால் கொடுக்கக் கூடாது என்பது விதியாகும். அதிலும் வெள்ளிக்கிழமையில் உப்பை கொடுக்கவே கூடாது என்று கூறப்படுகிறது. அத்தகைய கல் உப்பை நீங்கள் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வாங்கும் பொழுது வெள்ளிக்கிழமையாக பார்த்து வாங்குவது நல்லது.

அது போல் மளிகை சாமான் வாங்குபவர்கள் ஒரு லிஸ்ட் போடுவார்கள். அந்த லிஸ்டில் முதலிடம் உப்பிற்கு கொடுப்பது மகாலட்சுமிக்கு மரியாதை கொடுப்பதற்கு சமம் ஆகும். முதலில் எந்த ஒரு செயலையும் துவங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது போல பிள்ளையார் சுழி போட்டு துவங்கிய பின் முதல் வார்த்தையாக உப்பு என்று எழுதிக் கொள்வது நல்லது. இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு வறுமை என்பதே வராது எனவே கடன் என்பதும் இருக்க செய்யாது. வெள்ளிக்கிழமையில் உப்பை வாங்கி ஒரு சிறிய கண்ணாடி அல்லது பீங்கான், வெண்கல பாத்திரம் போன்ற ஏதாவது ஒன்றில் உப்பை கோபுரம் போல் கொட்டிக் கொள்ளுங்கள். அந்த உப்பு கண்ணாடியில் தெரியும் படி ஒரு கண்ணாடியை பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களிடம் புது கண்ணாடி இல்லையென்றால் கண்டிப்பாக அதனை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. எப்பொழுதும் பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி இருக்க வேண்டும். அதில் குலதெய்வம், நம் முன்னோர்கள் போன்றவர்கள் தோன்றுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

எனவே கண்ணாடியை வைத்து அதன் முன்பு இது போல் உப்பை குவித்து வைத்தால் கோடி கோடியாய் கடன்கள் இருந்தாலும் விரைவில் அடைய கூடிய பாக்கியம் உண்டாகும். வெள்ளிக்கிழமை முழுவதும் அந்த கண்ணாடியில் உப்பு தெரிய வேண்டும். மறுநாள் அந்த உப்பை வழக்கம் போல நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வைத்து கொண்டே வந்தால் கடன்கள் யாவும் சீக்கிரமாக நிவர்த்தியாகும். புதிதாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகாது, தோஷங்கள் தீரும்.