மட்டக்களப்பில் யானை தாக்கி ஆறு பிள்ளைகளின் தந்தை மரணம்

மட்டக்களப்பு – இலுப்பட்டிச்சேனை பகுதியில் யானை தாக்கி 6 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது வண்ண மணி கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மரப்பாலம், தலப்புலாவெலி பகுதியில் வயலில் காவல் பார்த்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.