நாட்டில் கோவிட் மூன்றாம் அலையில் இதுவரையில் 2,205 பேர் பலி!

நாட்டில் கோவிட் மூன்றாம் அலையில் இதுவரையில் 2,205 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கோவிட் -19 பெருந்தொற்று தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் 2205 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

குறிப்பிட்ட காலத்தில் 148,707 பேர் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 141,913 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 4,794 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இரண்டாயிரம் பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏழு நாட்களில் 389 பேர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.