மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி

மன்னார் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து வைத்தியர் .றோய் பீரிஸ் மற்றும் வைத்தியர் கே..சுதாகர் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆடை தொழிற்சாலையில் மேற்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் தள்ளாடி 54 படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தின் அனுசரையுடன் நேற்றைய தினம் 494 பேருக்கும், இன்றைய தினம் இரண்டாம் பகுதியினருக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.