மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 தொற்றாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 18கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கறுப்பங்கேணியில் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம்,கூழாவடி,கறுவப்பங்கேணி,கொக்குவில் பகுதி மக்களுக்குப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

இன்றைய தினம் 164பேர் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில் 18பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மாமாங்கத்தினை சேர்ந்த 10பேரும் கறுவப்பங்கேணியை சேர்ந்த 04பேரும் கூழாவடியை சேர்ந்த 03பேரும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருமாக 18பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேநேரம் அதிகளவான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள மாமாங்கம் பகுதியைத் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கோவிட் செயலணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.