கொழும்பில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளம் பெண்ணொருவர் கைது

கொழும்பில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோகிராம் 21 கிராம் ஹெரோயின் போதை பொருடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவின் போதை பொருள் தடுப்பு பிரிவினால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பெண்ணிடம் மீட்கப்பட்ட ஹெரோயின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.