இலங்கையில் தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் டெல்டா திரிபை கட்டுப்படுத்தக்கூடியவை என தெரிவிப்பு

இலங்கையில் தற்பொழுது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் கோவிட் வைரஸ் தொற்றின் மோசமான திரிபுகளில் ஒன்றான டெல்டா திரிபை கட்டுப்படுத்தக் கூடியவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வைரஸ் தொற்றுகள் மற்றும் தொற்று நோயியல் குறித்த நிபுணத்துவ மருத்துவர் இந்த விடயம் பற்றி ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது சினோபார்ம், அஸ்ட்ராசென்கா, பைசர் மற்றும் ஸ்புட்னிக்வீ ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து வகையான தடுப்பூசிகளுமே கோவிட் தொற்றின் டெல்டா திரிபிற்கு எதிராக செயற்படக் கூடியவை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத நிபுணத்துவ மருத்துவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபினை விடவும் ஆபத்தானதும், வேகமாக பரவக்கூடியதுமான மற்றுமொரு திரிபு உருவாகாது என உறுதிபடக் கூற முடியாது எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்ள் உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.