இலங்கையில் ஹெலிகப்டர் கொள்வனவு செய்த அரிசி வர்த்தகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

அண்மையில் ஹெலிகப்டர் கொள்வனவு செய்த பொலநறுவை அரிசி வர்த்தகர் தான் என ரத்ன அரிசி வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வர தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் உள்ளூர் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனிப்பட்ட விமானம் ஒன்றும் ஹெலிகப்டர்கள் சிலவற்றையும கொள்வனவு செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணத்தில் இந்த ஹெலிகப்டர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அரிசியில் இரசாயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் எதிர்வரும் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.