மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியுடன் நபரொருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியுடன் நபரொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு சுகாதார பொது பரிசோதகர்களால் குறித்த நபர் இறைச்சியை கொண்டு சென்ற வாகனம் ஈரட்டை பகுதியில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியினை பாதுகாப்பற்ற முறையில் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.