மட்டகளப்பில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை மீட்பு

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பகுதியில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் அறிவித்ததனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று முதலையினை மீட்டுள்ளனர்.

அத்துடன் சுமார் 6 அடி நீளமான குறித்த முதலை உன்னிச்சை காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.