கால்விரல்கள் இப்படி சிவப்பாக காணப்படுகின்றனவா..? இது கொரோனாவின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்…!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

கால் விரல்கள் சிவந்து காணப்படுவதும் கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கை அல்லது கால் விரல்களின் சருமம் சற்று சிவந்து அல்லது வீங்கி அல்லது இரண்டுமே இருந்து வலி ஏற்படுவதும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பெரும்பாலும், கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத சிறுவர்கள், இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு இந்த அறிகுறி மட்டும் தென்படுவதாகவும் கூறப்படுகிறது. பிரிட்டன், பிரான்ஸில் இந்த அறிகுறிகளுடன் பல சிறுவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.ஆரம்பத்தில், இருமல், காய்ச்சல், தலைவலி மட்டுமே கொரோனாவுக்கான அறிகுறிகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில், முகரும், சுவை அறியும் திறனை இழத்தல், வயிற்றுப் போக்கு, குளிர் மற்றும் குளிருடன் நடுக்கம் போன்றவையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டன.

இதில், தற்போது புதிதாக இணைகிறது கால்விரல் வீக்கம்.ஆனால், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது, உடலுக்குள் வந்த கொரோனா கிருமியை எதிர்த்து நமது நோய் எதிர்ப்பு சக்தி போராடுவதையே இந்த அறிகுறி காட்டுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள், கால் விரல்கள் சிவப்பதை கொரோனாவுக்கான அறிகுறிகளின் பட்டியலில் இன்னமும் சேர்க்கவில்லை. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தோல் மருத்துவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.அப்படி இணைக்கப்பட்டால்தான் கால்விரல்கள் சிவந்து இருப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடியும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.ஒரு வேளை யாருக்காவது கால் விரல்கள் சிவந்து காணப்பட்டால் உடனடியாக உங்கள் குடும்ப நல மருத்துவரை அல்லது தோல் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுங்கள். உடனடியாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குச் சென்று விடாதீர்கள், அங்கு உங்களுக்கு கொரோனா பரவலாம் அல்லது, நீங்கள் யாருக்காவது கொரோனாவைப் பரப்பலாம் என்றும் எச்சரிக்கிறார்கள்.முன்பெல்லாம் ஒரு சிலர்தான் கால் சிவத்தல் பிரச்னையோடு வருவார்கள். ஆனால், இப்போது ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரச்னையோடு மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்றும் பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அதே சமயம், கால் விரல்கள் சிவத்தல் போன்ற பிரச்னைகள், நீங்கள் விரைவில் குணமடையப் போகிறீர்கள் என்பதையே காட்டுவதாகவும், அதற்காக யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும், ஒரு வேளை முழு உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கும், அதிகப்படியான குளிர்ச்சி போன்ற காரணங்களாலும் இந்த கால்விரல் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் கால் விரல்கள் வீங்கலாம், பிறகு அது சிவந்து வலியை ஏற்படுத்தும். சில சமயம் வீங்கும் விரல் மட்டும் சற்று நீல நிறமாகவும் மாறலாம் என்றும் மருத்துவர்கள் விளக்குகிறார்கள்.