நாட்டில் இன்று முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்

நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தெடார்ந்தும் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று முன் தினம் போக்குவரத்து கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டன.

எனினும் மீண்டும் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறு தினம் அதிகாலை முதல் 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அசாதாரண தன்மையுடன் இனங்காணப்பட்ட மாதிரியில் டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.