வடக்கு மாகாணத்தில் மேலும் 66 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி

யாழ். ஆய்வுகூடங்களில் இன்று (22) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தில் மேலும் 66 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 57 பேரும், மன்னார் மாவட்டத்தில் 03 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 02 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேரும் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முள்ளிக்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய முகாம்களைச் சேர்ந்த இரண்டு கடற்படை சிப்பாய்கள் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.