மாமியாரை துஷ்பிரயோகம் செய்த மருமகனுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (22) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை, கிளிகுஞ்சுமலை பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராய்ச்சிலாகே கருணாபால (56 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-:
குறித்த சந்தேக நபர் தனது மனைவியின் தாயாரான 70 வயதுடைய பெண்ணை மது போதையில் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.