இனி இவற்றை இலங்கையில் பாவிக்க தடை!

நாட்டில் அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நேற்றையதினம் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறினார். அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதெவேளை விரைவில் உக்கக்கூடிய தன்மையுடைய லன்ச்ஷீட்களை அறிமுகப்படுத்துவதாக பல நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது உலகில் எந்தவொரு நாடும் லன்ச்ஷீட்களை பயன்படுத்துவதில்லை என தெரிவித்த அமைச்சர், லன்ச்ஷீட்டுகளை பயன்படுத்தும் ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமே எனவும் சுட்டிக்காட்டினார்.