சர்ச்சைக்கு இலக்கான செங்கலடி பிரதேச செயலாளர் இடமாற்றம்

சர்ச்சைக்கு இலக்கான செங்கலடி பிரதேச செயலாளர் விசாரணைகளின் நிமித்தம் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்தே செங்கலடி பிரதேச செயலாளர் விசாரணைக்காக கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பிரதேச செயலாளரின் வெற்றிடத்திற்கு தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாவு இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.