பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்திற்குள் 11 பேர் மரணம்

பயணக் கட்டுப்பாடுகள் நேற்று காலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பதினொரு பேர் மரணமாகினர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு பாதசாரிகள் மற்றும் ஒரு பாரவூர்தி ஒன்றின் உதவியாளர் என  அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீதிப் போக்குவரத்து விபத்துக்களை தவிர்க்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.