இந்தியர்கள் பலர் பணிபுரியும், வத்தளையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பலருக்கு கோவிட் தொற்று

இந்தியர்கள் பலர் பணிபுரியும், வத்தளையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 120 க்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரியவின் தகவல் படி, நேற்று பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட தொழிற்சாலையின் 192 பணியாளர்களிலேயே 120 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட முப்பது ஊழியர்கள் தனியார் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்கள் இலங்கை அரச சிகிச்சை சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் இந்தியர்களே பணியாளர்களாக உள்ளனர் என்று பாலசூரிய கூறினார். கோவிட் வைரஸின் மிகவும் பரவும் டெல்டா மாறுபாட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை அறிந்துக்கொள்ள பணியாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

“டெல்டா” மாறுபாடு ஏற்கனவே கொழும்பில் உள்ள தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது மாதிவல பகுதியிலும், இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.