யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இளம் யுவதி தற்கொலை! பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.