கொழும்பு நகரில் மக்கள் PCR பரிசோதனைகளை புறக்கணிக்கும் மக்கள்

கொழும்பு நகரில் மக்கள் PCR பரிசோதனைகளை மக்கள் புறக்கணிப்பதனால் கொவிட் கட்டுப்படுத்துவது சவாலாகி உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ரூவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதனால் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவுகள் பெறுவதற்கு சிரமமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொவிட் நோயை கட்டுப்படுத்த பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் கொழும்பு நகரில் அதிக அவதானமிக்க பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு PCR பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொண்டு தொற்றாளர்களை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.