உள்ளூர் சந்தையில் அரிசி இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

உள்ளூர் சந்தையில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை கட்டுப்படுத்தும் முகமாக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 145 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே ஜேவிபி சுட்டிக்காட்டியிருந்தது.

இதனை அடுத்து அரிசியை இறக்குமதி செய்யாமல் உள்ளூர் சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.