தமிழர் பகுதியில் விற்கப்படும் மீன்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல் !

கிளிநொச்சியில் சில சந்தர்ப்பங்களில் பொது மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்ற மீன்களில் போமலின் (Formalin) நச்சுப்பதார்த்தம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக பெரிய வகை மீன்களில் இவ் வகை பதார்த்தம் கலக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் பழுதடையாது சில நாட்களுக்கு வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இப் பாதார்த்தை மீன்கள் பழுதடையாது வைத்திருப்பதற்கும் மொத்த வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர் என்றும் அத்தோடு மீன்கள் பளபளப்பாக இருப்பதற்காக இவற்றுடன் சீனியும் கலக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் அதிக அக்கறை எடுத்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source : Tamilwin