இலங்கையில் மேலும் 52 பேர் கோவிட் தொற்றினால் மரணம்

இலங்கைக்குள் மேலும் 52 பேர் கோவிட் தொற்றினால் நேற்றையதினம் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் இறந்தோரின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 2,633 என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரையிலான காலப்பகுதியில் 1731பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.அதேநேரம் 1898 பேர் இன்று தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.