வவுனியா, செட்டிகுளத்தில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது

வவுனியா, செட்டிகுளத்தில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது சின்னத்தம்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் மூன்று கோடா பெரல்கள் மற்றும் வயர்கள் மீட்கப்பட்டதுடன், இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.