பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி மக்கள்

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகளும் திறந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன், வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை அனைத்து அங்காடிகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தும் வருகின்றனர்.

வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சேவைகளை பெற்றுக்கொண்டு வருவதுடன், கிளிநொச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.