24 மணி நேரத்தில் கொழும்பு மாநகர எல்லைக்குள் 63 பேருக்கு கோவிட் தொற்று

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் கோவிட் வைரஸுடன் கண்டறியப்பட்ட மொத்தம் 302 பேரில், 29 பேர் நாரஹன்பிட்டியவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப் பகுதியில் கொழும்பு மாநகர எல்லைக்குள் 63 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளவத்தையில் எட்டு பேரும், கோட்டையில் ஐந்து பேரும் தொற்றாளிகளாக பதிவாகியுள்ளனர்.

ஹல்ப்ட்ஸ்டொர்ப் மற்றும் மட்டக்குளியவிலிருந்து தலா மூன்று தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

கொம்பனி வீதி, பம்பலபிட்டி, பொரெல்ல, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களில் தலா இரண்டு தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

ஏற்கனவே அதிவேகமாக பரவக்கூடிய “டெல்டா” மாறுபாடு கண்டறியப்பட்ட, தெமட்டகொட பகுதியில் நேற்று தொற்றாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டிய கருவாத் தோட்டம், புறக்கோட்டை மற்றும் புளூமெண்டால் ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு தொற்றாளி கண்டறியப்பட்டார்.

கொழும்பு மாவட்டத்தின் மீதமுள்ள பகுதிகளான, ஹன்வெல்லவில் 33, கொஸ்கமவில் 28, அவிசாவெல்ல மற்றும் கல்கிசையில் தலா 21, மற்றும் பிலியந்தலையில் 20 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கஹதுடுவ மற்றும் நவகமுவவில் தலா 17 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், அதே நேரத்தில் பாதுக்கையில் 15 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

மீபேயில் இருந்து எட்டு பேரும், மகரகமவிலிருந்து 7 பேரும், வெல்லம்பிட்டி, தெஹிவளை மற்றும் எகோடாயன ஆகிய இடங்களில் தலா 6 பேரும், தலங்கம மற்றும் வெலிகடையிலிருந்து தலா 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் மற்றும் கோஹுவலயில் தலா 3 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிரிஹனவில் பாதிக்கப்பட்ட 2 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர், அதே நேரத்தில் அதுருகிரிய, மாலிகாவத்த, மொரட்டுமுல்ல மற்றும் முல்லேரியா ஆகிய இடங்களில் இருந்து தலா ஒரு தொற்று பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் 2020, மார்ச் ஆரம்பத்தில் கோவிட் பரவ ஆரம்பித்ததில் இருந்து, இதுவரை 239,689 கோவிட் தொற்றுகள் இலங்கையில் பதிவாகியுள்ளன.

35,766 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் மருத்துவ கவனிப்பில் உள்ளதுடன் 201,389 பேர் நோயில் இருந்து குணமாகியுள்ளனர்.