வடக்கு பகுதியில் மதுபான கொள்வனவிற்காக திரண்ட அதிகளவானோர்

கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதிலும் அதிகளவில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் நீண்ட நாட்களிற்கு பின் மதுபானம் கொள்வனவு செய்வதற்கு அதிகளவானோர் மதுபான நிலையங்களின் முன்பாக  நீண்ட வரிசைகளில் நிற்பதை காணக்கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவளை மதுபான நிலையங்களிற்கு முன்பாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.