யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாள் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு

யாழ். கொடிகாமம், எழுதுமட்டுவாள் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் குண்டு நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள காணி ஒன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாகக் கொடிகாமம் பொலிஸாருக்கு குறித்த சம்பவம் தொடர்பில் தகவல்  வழங்கப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் ம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.