இலங்கையில் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்ற நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்டி, கெப்பிட்டிபொல, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன.

சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.